தமிழ்நாட்டிலேயே இதுதான் பெஸ்ட் டீ’!.. மாஸ்டரை பாராட்டிய ராகுல்காந்தி.. எங்கே தெரியுமா..?

தேர்தல் பிரச்சாரத்தின் போது டீ கடை ஒன்றில் ராகுல் காந்தி டீ குடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி தமிழகம் வந்துள்ளார். தென்காசி மற்றும் நெல்லை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார். அப்போது அடைக்கலப்பட்டினத்தில் அமைந்துள்ள ‘முருகேசன் டீ ஸ்டால்’ என்ற கடையில் வண்டியை நிறுத்தி ராகுல்காந்தி டீ குடித்துவிட்டு சென்றார்.

டீயை குடித்தபடி சுற்றியுள்ள மக்களிடம் பேசிய ராகுல்காந்தி, அப்போது டீ மாஸ்டரின் தோளில் கையை போட்டுக்கொண்டு ‘தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இதுதான்’ என தமிழில் பேசி அசத்தினார்.

பின்னர் டீ மாஸ்டரின் பேரை கேட்டறிந்த ராகுல்காந்தி அவரிடம், ‘முருகேசன், நன்றி வணக்கம்’ எனச் சொல்லி அங்கிருந்து விடை பெற்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.