இதுக்காக தான் திடீர்னு ‘லீவ்’ எடுத்தாரா?!.. பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் நடக்கும் ‘கல்யாண’ ஏற்பாடு?.. தீயாய் பரவும் தகவல்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை (04.03.2021) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியை வெற்றி அல்லது டிரா செய்வதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், ‘இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விடுவிக்கப்பட்டு உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னை விடுவிக்குமாறு பும்ரா கேட்டு கொண்டார். அதனால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பும்ரா தனது திருமணத்திற்காக சில நாட்கள் விடுமுறை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பும்ரா தனக்கு திருமணம் நடைபெற உள்ளது குறித்து பிசிசிஐ-யிடம் தெரிவித்ததாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்ய விடுமுறை எடுத்துள்ளதாகவும் பிசிசிஐ வட்டாராங்கள் தெரிவித்ததாக ANI செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருமண தேதி, பெண் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக நடிகை அனுபமா பரமேஸ்வரனும், பும்ராவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. அப்போது இதுகுறித்து இருவர் தரப்பில் இருந்தும் எந்த மறுப்பும் வரவில்லை.

இங்கிலாந்து தொடரில் இருந்து பும்ரா விடுமுறை எடுத்துள்ள நிலையில், அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘Happy holiday to me’ என பதிவிட்டுள்ளது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.