காதலனுடன்’ காரில் சென்ற போது நேர்ந்த ‘விபத்து’… ‘பெண்ணை’ அழைத்துச் செல்ல ஸ்பாட்டிற்கு வந்த நபரால்… பொலிசாருக்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’!!

காரில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர், விபத்தில் சிக்கிய நிலையில், விபத்து தொடர்பாக அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெக்ஸிகோ நாட்டின் சால்டில்லோ (Saltillo) என்னும் பகுதியில், வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று, சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி, விபத்தில் சிக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அப்போது காருக்குள் எட்னா (Edna) என்ற பெண் ஒருவர் இருந்துள்ளார். அதன் பின்னர், மருத்துவக் குழு பத்திரமாக அவரைக் காருக்குள் இருந்து மீட்ட நிலையில், விபத்து நடந்த போது காரில் தான் மட்டுமே இருந்ததாகவும், தன்னால் விபத்து நிகழ்ந்ததாகவும் போலீசாரிடம் எட்னா கூறியுள்ளார். ஆனால், காருக்குள் எட்னாவுடன் அவரது காதலர் ரவுல் (Raul) என்பவர் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தனது காதலரை காப்பாற்ற வேண்டித் தான், விபத்து தன்னால் நிகழ்ந்ததாக எட்னா பொய் கூறியுள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், யாருக்கும் தெரியாத வேறொரு அதிர்ச்சி தகவல், அதன் பின்னர் தெரிய வந்துள்ளது.

எட்னாவை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டி, அவரது வீட்டிலுள்ளவர்களை மொபைல் போன் மூலம் போலீசார் அழைத்துள்ளனர். அதன்படி, எட்னாவை அழைத்து போக அவரது வீட்டிலிருந்து ஒருவர் வந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை. எட்னாவின் கணவர் தான் அது. எட்னா தனது கணவருக்கு துரோகம் செய்வதும், அவரை ஏமாற்றி, தனது காதலர் ரவுலுடன் சுற்றி வந்ததும் அதன் பிறகு தெரிய வந்துள்ளது.

இதில், விபத்தை ஏற்படுத்திய ரவுலை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில், எட்னாவை அவரது கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். ஒரு விபத்து மூலம், பெண் ஒருவர் தனது கணவரை ஏமாற்றி வந்த செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.