வெடித்து சிதறிய ஸ்பேஸ் X ராக்கெட்- இன்னும் எத்தனை தடவை இப்படி நடக்குமோ தெரியவில்லை !

டெஸ்லா காரின் உரிமையாளர் இலன் முஸ்க், விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் திட்டம் ஒன்றை செயல்படுத்த பெரும் முயற்சியில் இறங்கியுள்ளார். இவரது திட்டத்தின் பெயர் தான் ஸ்பேஸ்-X ஆகும். இவர்கள் பலவிதமான ராக்கெட்டுகளை ஏவி பரிசோதனை செய்து பார்த்த வண்ணம் உள்ளார்கள். இதில் சில ராக்கெட்டுகள் வெடித்து சிதறியும் உள்ளது. ஆனால் தற்போது ஏவப்படும் ராக்கெட்டுகள், புறப்பட்டு சில செக்கனில் மீண்டும் தரையில் விழும் விதத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

ஆனால் கணணி கோளாறு காரணமாக நேற்றைய தினம் ஏவப்பட்ட ஸ்பேஸ்-X ராக்கெட் ஒன்று உடனே வீழ்ந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில். இதுவும் அப்படி தான் என்கிறார்கள். எது உண்மை எது பொய் என்பது இன்றுவரை தெரியவில்லை. இத்தனை ராக்கெட்டுகளை ஏவி, பின்னர் வீழ்த்தி, மக்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு போய் விட்டது இந்த ஸ்பேஸ்-X திட்டம். இனி யார் உண்மையாக ஏறிப் பயணிப்பார்களோ தெரியவில்லை.