தர்ஷன் உடன் செம ரொமான்ஸ் போல.. ஜோடி போட்டு சுற்றும் லாஸ்லியா.. வைரலாகும் போட்டோஸ்

பிக் பாஸ் தர்ஷன் உடன் லாஸ்லியா சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் கூகுள் குட்டப்பன் படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கூகுள் குட்டப்பன் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ள நிலையில், இருவரும் இணைந்து இருக்கும் ஏகப்பட்ட போட்டோக்கள் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி லாஸ்லியாவை மறுபடியும் இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்கிற முடிவோடு கோலிவுட் கதவு அவருக்கென தாராளமாக திறந்துள்ளது. ஹர்பஜன் சிங் உடன் பிரெண்ட்ஷிப், ஆரியுடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் மற்றும் இன்னும் சில படங்களிலும் கமீட் ஆகி உள்ளார். சமீபத்தில் லாஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இருவரும் கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ள பிரெண்ட்ஷிப் படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. சந்தன கலர் சேலை, பிங்க் கலர் ஜாக்கெட் அணிந்து கொண்டு, கூலர்ஸ் எல்லாம் போட்டுக் கொண்டு செம கலக்கலாக லாஸ்லியா நடந்து வரும் வீடியோவை பலரும் கட் பண்ணி ஷேர் செய்து வருகின்றனர்.

பிரெண்ட்ஷிப் படம் விரைவில் வெள்ளித்திரையில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர்கள் இயக்கத்தில் லாஸ்லியா, தர்ஷன் நடிப்பில் கூகுள் குட்டப்பன் உருவாகி வருகிறது. மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம். நடிகை லாஸ்லியா மற்றும் தர்ஷன் இந்த படத்தின் ஷூட்டிங்கில் தான் தற்போது பிசியாகி உள்ளனர். பிக் பாஸ் பிரபலமான தர்ஷன் உடன் லாஸ்லியா நெருக்கமாக நின்று செம ரொமான்டிக்காக எடுத்த ஏகப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி லாஸ்லியா மற்றும் தர்ஷன் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது.