கேக் வெட்டி மாப்பிள்ளையின் ‘ஃப்ரண்ட்ஸ்’ கொடுத்த கிப்ட்.. கல்யாண மண்டபத்தை ‘கலகலக்க’ வைத்த சம்பவம்.. அப்படி என்ன ஸ்பெஷல் கிப்ட் அது..?

திருமணம் ஒன்றில் மணமக்களுக்கு நண்பர்கள் கொடுத்த பரிசு சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் ஏரிவாயு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் பெட்ரோல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை சுட்டிக் காட்டும் விதமாக, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற நவீன்-சங்கமேஷ்வரி ஆகியோரது திருமண நிகழ்ச்சியில், மணமகனின் நண்பர்கள் கேக் வெட்டி, சிலிண்டர், பெட்ரோலை பரிசாக வழங்கினர். திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் மத்தியில் இது கவனம் ஈர்த்தது.

இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் திருமண பரிசாக மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் பெட்ரோல் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.