மியான்மர் ராணுவ சேனல்கள் முடக்கம்: யூடியூப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு !

மியான்மர் ராணுவம் சார்ந்து இயங்கும் 5 சேனல்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.மியான்மரில் ராணுவ ஆட்சி தொடங்கியதற்கு எதிராக போராட்டக்காரர்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை யாங்கூன் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் ராணுவத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது.

அப்போது போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதில் நேற்று முன் தினம் மட்டும் 38 பேர் பலியாகினர். இதுவரை ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 50 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.இந்த நிலையில் மியான்மர் ராணுவ வீடியோ பக்கங்கள் யூடியூப் சேனலில் முடக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து யூடியூப் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ எங்கள் விதிமுறை மற்றும் சட்டங்களுக்கு எதிராக இருந்த மியான்மர் ராணுவத்தின் 5 யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.