வெடித்தது இருவருக்கு இடையே ஒரு பனிப் போர்: அங்கஜனை தட்டித் தூக்குவேன் எகிறார் டக்கி மாமா!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் அரச அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் மீது யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தலைவரின் இணைப்பாளர்கள் என்ற பெயரில் மிரட்டல், அழுத்தம் கொடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இது தொடர்பாக நான் அங்கஜனோடு பேச உள்ளேன். இல்லையென்றால் நேரடியாக முறைப்பாடு செய்வேன் என்று கூறியுள்ளார்.

வடக்கின் இணைப்பாளர் என்ற ரீதியில் அங்கஜன் ஆட்கள் பலர், அரச அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும். யாழ் கிழிநொச்சி அரச அதிகாரிகளை மிரட்டி தாம் சொன்ன படி கேட்க்க வேண்டும் என்று கூறி வருவதாகவும் டக்கி மாமா கூறியுள்ளார். இவர்கள் இருவருமே மகிந்தவின் கைப்புள்ளைகள் தான். ஆனால் தற்போது இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு அதிகார போட்டி ஒன்று ஆரம்பமாகியுள்ளது. சிட் & வாட்ச் செய்யலாமே தமிழர்களே… பொறுத்திருந்து பார்ப்போம்.