திரைப்பட பாணியில் தீவுக்குள் சோதனை செய்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி; என்னடா செய்யிறீங்க!

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று படுகையில் இருக்கிறது. இங்கு தேர்தலை முன்னிட்டு 10 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலோர காவல்படை உதவியுடன் கலால் துறையினர் ஏனாம் பிராந்திய தீவுகளில் சோதனை நடத்தினர்.

இதில் தீவு மூன்றான, தரியாலாடிப்பா பகுதியில் நிலத்தடியில் 8,000 லிட்டர் புளித்த வெல்ல பாகு கண்டெத்தனர். இதனை தேர்தல் நேரத்தில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்க சிலர் முயன்று இருப்பது தெரியவந்தது. ஏனாம் மண்டல அதிகாரி அமன் ஷர்மா, காவல் கண்காணிப்பாளர் பக்தவச்சலம் தலைமையிலான குழுவினர் திரைப்பட பாணியில் தீவு கரையோரம் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று அலைந்து திரிந்து பேரல்களை கண்டனர்.

இதனையடுத்து சுமார் 8,000 லிட்டர் புளித்த வெல்ல பாகுகளை போலீசார் அழித்தனர். மேலும் காலி செய்த பேரல்களை காவல் நிலையம் எடுத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.