ஆன்லைன்’ மூலம் நடந்த கோர்ட் ‘விசாரணை’… நடுவே ‘வழக்கறிஞர்’ செய்த ‘செயல்’… வைரலாகும் ‘வீடியோ’!!

கொரோனா தொற்றின் காரணமாக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக, பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் துறை தொடர்பான சந்திப்புகள் அனைத்தும் ஆன்லைன் வீடியோ கால் மூலம் நடைபெற்று வருகிறது.

patna lawyer eats lunch during virtual court session

தொழில்நுட்பத்தின் மூலம் இந்த சந்திப்புகள் நடைபெறுவதால், இதில் சிலர் செய்யும் தவறுகளால் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறாமலும் இருப்பதில்லை. அப்படி, பல வீடியோக்கள் கடந்த சில மாதங்களில் அதிகம் வைரலாகியிருந்தது.

இந்நிலையில், அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம், பாட்னா உயர்நீதி மன்ற வழக்கறிஞராக இருப்பவர் ஷத்ரஷால் ராஜ் (Kshatrshal Raj). ஜூம் ஆன்லைன் வீடியோ கால் மூலம் நடைபெற்று வந்த விசாரணையில் ஷத்ரஷால் கலந்து கொண்டுள்ளார். இந்த அழைப்பில், ஷத்ரஷாலுடன் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் (Solicitor General) ஹர்ஷல் மேத்தாவும் உடனிருந்தார்.

அப்போது, தான் வீடியோ கால் இணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டு விட்டதாக எண்ணிய ஷத்ரஷால் ராஜ், கேமரா ஆனில் வைத்துக் கொண்டே உணவருந்த ஆரம்பித்துள்ளார். இதனைக் கண்ட ஹர்ஷல் மேத்தா, சைகை காட்டி ஷத்ரஷால் ராஜை அழைத்துள்ளார். அவர், ஹர்ஷல் மேத்தாவின் அழைப்பை முயூட் செய்து வைத்ததால், அவரின் சத்தத்தையும் ஷத்ரஷால் ராஜ் கேட்கவில்லை என தெரிகிறது.

 

இது தொடர்பான வீடியோ, தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.