ஓடியாங்க, நாம எல்லாருமே பணக்காரங்க ஆக போறோம்…’ ‘ஒரு கிராமமே வந்து குவிஞ்சிட்டாங்க…’ ‘அவங்க கேள்விப்பட்ட விஷயம் அப்படி…’

ஆப்பிரிக்காவில் தங்க மலை இருப்பதாக எழுந்த செய்தியால் ஒரு கிராமமே தங்க மலையை தேடி ஓடிய வீடியோ வைரலாகியுள்ளது.

ஆப்பிரிக்காவின் காங்கோ பகுதியில் தங்கத்தால் நிரம்பிய மலை இருப்பதாக கிராம மக்களிடையே செய்திப் பரவியுள்ளது. அந்த மலையில், 60 முதல் 90 சதவீதம் பரப்பளவில் தங்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்போது அந்த தங்க மலையில் சுரங்கப் பணிகள் நடந்து வருகிறது. தங்க மலை இருக்கிறது என்ற தகவலை கிராம மக்கள் அறிந்தவுடன், அவர்களும் தங்கத்தை எடுத்துக்கொள்ள அங்கு சென்றனர். இந்த சம்பவம் முழுவதையும் பத்திரிகையாளர் அகமது அல்கோபரி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

மக்கள் அனைவரும் தங்களுடைய பெரிய பைகளில் தங்கத்தை நிரப்பிக்கொண்டு சென்ற வீடியோ 28 விநாடிகள் கொண்ட வீடியோவை இதுவரை 53 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

மக்கள் வந்து குவிந்ததால் சுரங்கப் பணிகளை சிறிது நேரம் நிறுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.