அந்த ஒரு விஷயத்தில் திரிஷாவை தூக்கி சாப்பிட்ட சமந்தா.. நயன லிஸ்ட்ல கானுமே என வலை வீசி தேடும் ரசிகர்கள்!

கோலிவுட்டில் 2000ஆம் ஆண்டுகளில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை திரிஷா. இவர் ‘மௌனம் பேசியதே’ என்ற படத்தின் மூலம்தான் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நடிகை திரிஷா தனது திறமையான நடிப்பாலும், அழகான தோற்றத்தாலும், வசீகரிக்கும் ஆட்டத்தாலும் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு மட்டுமில்லாமல், முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், தனுஷ் என அனைவருடனும் குறுகிய காலத்திலேயே ஜோடி போட்டு  நடித்தார்.

மேலும் நடிகைகளுக்கு வயசான வரும் பிரச்சனை போல த்ரிஷாவுக்கும்  வயது அதிகரித்த உடன் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. ஆனால் அந்த நேரத்தில் அவர் நடித்த 96 படம் திரிஷாவின்  மார்க்கெட்டை தூக்கி விட்டது என்றே கூறலாம்.   இவ்வாறு தனது இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் நடித்து வரும் த்ரிஷா தற்போது ரூபாய் 1.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். இந்த நிலையில் நடிகை த்ரிஷாவை விட தமிழ் சினிமாவில் மற்ற இரண்டு நடிகைகள் அதிக சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நடிகை த்ரிஷாவை விட நடிகை சமந்தா 50 லட்சம் அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறாராம். இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது.  அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷும் ஒரு படத்திற்கு ரூபாய் 2 கோடி சம்பளமாக வழங்கி வருகிறாராம். எனவே, இவ்வாறு திரிஷாவிற்கு பின் வந்த இந்த இரு நடிகைகளும் அவரை விட அதிகமாக சம்பளம் வாங்குகின்றனர் என்ற தகவலை அறிந்த த்ரிஷா ரசிகர்கள் அதிர்ச்சியில்  உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த லிஸ்டில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பெயர் வரலையே என்று பல நயன் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.