பக்கி என்று பாக்கிஸ்தான் ராணுவ வீரரை கூப்பிட்ட ஹரி: எப்படி நிற வேறு பாடு பற்றி பேச லாயக்கு ?

தானும் தன்னுடைய மனைவி மெகான் மார்களும் இன வெறி துவேசத்திற்கு ஆளாகினோம் என்று கூறி, TV நிகழ்சிகளில் பேசி வரும் ஹரி. தான் வேலை பார்த்த ரெஜிமென்டில் உள்ள பாக்கிஸ்தான் நாட்டு ராணுவ வீரர் ஒருவரை பாக்கி என்ற கொச்சை சொல்லை பாவித்து அழைத்துள்ளார். பின்னர் தான் பகிடி விட்டதாக கூறி சமாளித்து தப்பினார் என்று, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பிரிட்டனை சேர்ந்த மற்றும் பாக்கிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் பிரித்தானிய ராணுவத்தில் ஒரு கோப்ரலாக செயல்பட்டு வருகிறார். தான் வேலை பார்த்த ரெஜிமென்டில் தான் இளவரசர் ஹரியும் வேலை பார்த்ததாகவும். ஒரு நாள் இவ்வாறு தன்னை கொச்சைப் படுத்தி அவர் பேசி விட்டு. பின்னர் நண்பர்களுக்கு உள்ளே இது சகஜம். நான் பகிடி தான் செய்தேன் என்று கூறி சமாளித்து விட்டார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன் நிலையில் எப்படி அவர் இன வெறி குறித்து பேச முடியும் என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒரு வகையில் சொல்லப் போனால் அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத் தான் செய்கிறது. தனக்கு என்று வரும்போது தான் சுடுகிறது ?