அப்பா வயது சூர்யாவை திருமணம் செய்ய ஆசைப்படும் 17 வயது சீரியல் நடிகை!

விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தில் நடித்தவர் ரவீணா தாஹா. 17 வயதாகும் அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் 2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார் ரவீணா. அதற்கு லைக்ஸுகளும் வந்து குவிகிறது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். தற்போது எல்லாம் யூடியூப் சேனல் பேட்டிகளில் பிரபலங்களிடம் வில்லங்கமான கேள்விகளை கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் சின்னப் பிள்ளையான ரவீணாவிடம் போய் மேரி மீ, கிஸ் மீ என்று யாரிடம் சொல்வீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ரவீணாவோ சூர்யாவை பார்த்து மேரி மீ என்று சொல்வேன், அஜித்திடம் கிஸ் மீ என்பேன் என பதில் அளித்துள்ளார்.

அப்பா வயது நடிகர்களிடம் போய் சொல்லும் வார்த்தைகளா இது என்று அந்த பேட்டியை பார்த்தவர்கள் ரவீணாவை விளாசுகிறார்கள். மேலும் மைனரை பேட்டி எடுக்கும்போது இப்படி எல்லாம் கேள்வி கேட்டிருக்கக் கூடாது. அதனால் ரவீணாவை குறை சொல்லியும் தவறு இல்லை என்று சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலரோ, இது எல்லாம் சிறுசுலயே வீணாப் போகிறது என்று ரவீணாவை விமர்சித்துள்ளனர். சின்னப் பொண்ணு, அதற்கு என்ன தெரியும், ஏதோ கேள்வி கேட்க டக்குனு பதில் சொல்லிடுச்சு என ரவீணாவுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுகிறது.

என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லிவிடுவதா, இது என் வயதுக்கு மீறிய கேள்வி என்று ரவீணாவாவது சொல்லியிருக்க வேண்டும் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். முன்னதாக தெலுங்கு பிக் பாஸ் பிரபலமான அஷு ரெட்டியிடம் நீங்கள் பவன் கல்யாணின் 4வது மனைவியாக தயாரா என்று சமூக வலைதளவாசி ஒருவர் கேட்க, அவரோ கொஞ்சம் கூட யோசிக்காமல் தயார் என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.