வீட்டு கதவில் உள்ள பெல் அடிக்கும் கமராவில் பதிந்த கொலை: பொலிஸ்காரரே கடத்திக் கொன்றதால் லண்டனில் பரபரப்பு !

சேல்ஸ் எக்சிகியூட்டிவாக(Sales Excursive) வேலை பார்த்த சாரா என்னும் 33 வயதுப் பெண், சரியாக இரவு 7.30 மணிக்கு பிரிக்ஸ்டனில் உள்ள செயின்ஸ்(Sainsbury) பெரிக்கு சென்று, வைன் போத்தல் ஒன்றை வாங்கிக் கொண்டு தனது நண்பி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். இரவு 9 மணி அளவில் அவர் தனது நண்பி வீட்டில் இருந்து கிளம்பி நடந்து தனது வீடு செல்ல முற்பட்டுள்ளார். கிளப்பம்-கொமன் என்னும் இடம் ஊடாக சவுத் சேக்கிளார் ரோட்(A205) வழியாக அவர் நடந்து சென்றது CCTV கமராவில் பதிவாகியுள்ளது.

Ponders Road வீதியில் உள்ள வீடு ஒன்றின் கதவில், பெல் பட்டனை அழுத்தும் இடத்தில் ஒரு சிறிய CCTV கமரா உள்ளது. அதன் ஊடாக வீட்டின் வெளியே யார் நிற்கிறார்கள் என்று பார்க்க முடியும். அந்த கமராவில் சாரா நடந்து செல்வது 9.25 மணிக்கு பதிவாகியுள்ளது. பின்னர் அவர் அருகே உள்ள பஸ் நிலையம் ஒன்றில் இரவு 9.30க்கு நடப்பதும் பதிவாகியுள்ளது. அது ஒரு பழைய பஸ் நிலையம். அதனால் அதற்கு உள்ளே CCTV கமரா இருக்கும் என்று எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். அங்கே தான் இந்த Metro பாலிடன் பொலிஸ் அதிகாரி பிழை விட்டுள்ளார்.

வெயினி என்று அழைக்கப்படும் இந்த மெற்றோ பாலிடன் பொலிஸ் அதிகாரி, லண்டனில் உள்ள அமெரிக்க தூதுவராலய பாதுகாப்பில் ஈடுபடும் நபர். அன்றும் அவர் மாலை 2 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை வேலை பார்த்து விட்டு. சரியாக இரவு 8 மணிக்கு கிளம்பி விட்டார். சாரா 9.30 மணி தொடக்கம் மறைந்து விட்டார்(அவரைக் காணவில்லை). அவர் வீடு திரும்பவில்லை. 3ம் திகதி தொடக்கம் பொலிசார் பெரும் வேட்டை நடத்தி வந்த நிலையில், குப்பைகள் கொட்டும் கழிவு இடமான woodland   என்னும் இடத்தில் அதுவும் கென்ட்(Ashford near Kent- Dover) சில மனித எச்சங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அது சாராவின் உடல் பாகங்கள் தான் என்பதனை பொலிசார் உறுதி செய்தார்கள். பொலிசார் 3ம் திகதி இரவு 9.30 மணிக்கு பஸ் தரிப்பு நிலையத்தில் எடுத்த CCTV கமராவை வைத்து பார்த்தவேளை தான், வெயினி என்ற பாதுகாப்பு அதிகாரி சாராவை அணுகிய விடையத்தை கண்டு திகைத்துப் போனார்கள். அவரது கார் நம்பர் பிளேட், அவர் பின்னர் KENT சென்ற விடையம், என்று அனைத்து CCTV கமராக்களையும் ஒன்றாக சேர்த்து பார்த்ததில், அமெரிக்க உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு அதிகாரியான வெயினியை பொலிசார் திடீரென கைது செய்து. Tooting பொலிஸ் நிலையத்தில் சிறையில் இட்டுள்ளார்கள்.

சிறையில் இன்றைய தினம்(10) வெயினி தன்னை தானே,  மண்டையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று முதல் உதவி செய்த பொலிசார் மீண்டும் அவரை சிறையில் அடைத்துள்ளார்கள். நண்பியின் வீட்டில் வைன் குடித்துவிட்டு அரை போதையில் வந்த சாராவுடன் பேசி. அவரை அழைத்துச் சென்று கற்பழித்து , இல்லையேல் உடல் உறவு கொண்டு பின்னர் ஏதோ ஒரு காரணத்திற்காக அவரை கொலை செய்து, நீண்ட தூரம் கார் ஓட்டிச் சென்று கென்ட் மாநகரில் உடலை சிதைத்து , பின்னர் போட்டுச் சென்றுள்ளார் இந்த வெயினி என்று,  பொலிசார் சந்தேகம் கொண்டுள்ளார்கள்.

இனம் தெரியாத நபர்களோடு செல்வதும், அவர்களோடு உறவு கொள்வதும் சில வெள்ளை இன மக்கள் மத்தியில் வழக்கமான ஒரு விடையம்.  இதனை  One-Night-Standஎன்று சொல்வார்கள். ஒரு நாள் ராத்திரி மட்டும் இருக்கும் உடல் உறவு. ஆனால் அது எவ்வளவு ஆபத்தான விடையம் என்பதனை இந்தச் சம்பவம் மிக நன்றாக உணர்த்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.  அதனை விட ஒரு விடையத்தை கண்டு பிடிக்கவேண்டம் என்று ஸ்காட்லன் யாட் முடிவு எடுத்தால், எந்த ரேஞ்சுக்கும் அவர்கள் இறங்குவார்கள் என்பதனை நாம் மறுக்கவும் முடியாது. காரணம் வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வீட்டையும் ஆராய்ந்து அங்கே உள்ள CCTV கமராவை பார்த்து துல்லியமாக விடையங்களை அறிந்துள்ளார்கள் பொலிசார். 

அதிர்வுக்காக
கண்ணன்.