புலிகள் தடையை எடுக்க மேலும் அழுத்தம்: பிரீத்தி பட்டேல் ஆலோசனை: ஆனால் பிக்குகள் போராட்டம் !

லண்டனில் நாடு கடந்த அரசு பிரித்தானிய அரசு மீது தொடுத்த வழக்கு நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகிறது. விடுதலைப் புலிகளை தடை செய்தது ஓகே. ஆனால் அந்த தடையை ஏன் நீடிக்க வேண்டும் ? என்று விளக்கம் கேட்டு சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு பிரித்தானிய உள்துறை அமைச்சு கொடுத்த பதில் திருப்த்திகரமாக இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ள அதேவேளை. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு, அது பரிந்துரை செய்துள்ளது.

இதனால் லண்டனில் உள்ள புத்த பிக்குகள், மற்றும் சிங்கள சமூகம் இணைந்து பெரும் எடுப்பில் பிரித்தானிய உள்துறை அமைச்சருக்கு கடிதங்களை அனுப்பி வருவதோடு. சில கம்பெனிகளை அணுகி, இந்த செய்தியை டெயிலி மிரர் போன்ற பிரபல்யமான ஊடகங்களில் செய்தியாகவும் பிரசுரித்தும் உள்ளார்கள். விடுதலைப் புலிகள், கடும் பயங்கரவாதிகள் என்றும். இரகசியமாக நடக்கும் வழக்கு ஊடாக விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், டெயிலி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

அதனை முழுமையாக வாசிக்க இங்கே அழுத்தவும்: https://www.dailymail.co.uk/news/article-9359637/UK-ban-one-worlds-dangerous-terrorist-groups-Tamil-Tigers-lifted.html#newcomment