அதோ அங்க தெரியுது பாருங்க…’ ‘அதான் என்னோட மேரேஜ் கிஃப்ட்…’ – மனைவி கொடுத்த பரிசால் கண் கலங்கி நின்ற கணவன்…!

அமெரிக்காவில் தன் கணவருக்கு ஆடம்பர படகை திருமண பரிசாக அளித்து திக்குமுக்காட வைத்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில், கடந்த 7 ஆம் தேதி ஜனீன் சோலருக்கும் ட்ரெடெரிக் க்ரேவுக்கும் காதல் திருமணம் நடந்தது.

தன் கணவருக்கு அனைவரும் ஆச்சரியப்படும் வகையும், தன் அளவிற்கு அதிகமான காதலை வெளிப்படுத்து வகையில் திருமண பரிசை அளிக்க நினைத்த ஜனீன், தண்ணீரில் நின்றுக்கொண்டிருந்த விலையுயர்ந்த படகை காட்டியுள்ளார்.

இதைக் கண்ட மணமகன் ட்ரெடெரிக், ஜனீன் கொடுத்த படகை கண்டு கண்கலங்கி, ஜனீனை கட்டியணைத்து அழுதுள்ளார். அவர்மட்டுமல்லாது திருமணத்துக்கு வந்த விருந்தினர்களும் இன்ப அதிர்ச்சி அடைந்து வியந்துள்ளனர் எனலாம்.