கிங்ஸ்பெரி வீதியை மறித்த தமிழர்கள்- பொலிசாருடன் வாக்குவாதம்- நீதி வேண்டும் என்று போராட்டம் !

பிரித்தானியாவின் கிங்ஸ்பெரி பகுதியில், கடந்த 16 நாட்களாக அம்பிகை என்ற ஈழ்த்துப் பெண் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன் நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திரண்ட தமிழர்கள் கிங்க்ஸ் பெரி வீதியை முடக்கியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதனால் போக்கு வரத்து தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கே பொலிசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள். அங்கே இருக்கும் தமிழ் இளைஞர்கள் சிலர் பொலிசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தாம் இலங்கையில் நடந்த கொலைகளுக்கு நீதிகேட்டு, மற்றும் ஐ நாவிடம் பிரித்தானியா கோரிக்கை விடுக்க வேண்டும் என்று இந்த போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் பிரித்தானியாவில் ஒரு சிறிய நகரில், அதுவும் இந்தியர்கள் அதிகம் வாழும் கிங்ஸ்பெரி நகரில் இவ்வாறு வீதிமறிப்பு போராட்டம் என்பது, எந்த ஒரு பயனையும் தமிழர்களுக்கு தரப் போவது இல்லை என புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இதுவே பிரித்தானியாவின் பாராளுமன்றம் முன்பாக , அல்லது காமன் வெலத் அலுவலம் முன்பாக இடம்பெற்றிருந்தால் பலரது கவனத்தை ஈர்ந்திருக்கும்.

அதேவேளை பிரித்தானியாவில் தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஏதுவான சூழ் நிலை ஏற்பட்டுள்ள நிலையில். தமிழர்கள் சட்ட திட்டங்களை மீறிகிறார்கள் என்ற எண்ணம் உள்துறை அமைச்சுக்கு ஏற்படுவது நல்லது அல்ல என்றும் பல தமிழர்கள் கருதுகிறார்கள். பிரித்தானியாவில் லாக் டவுன் என்ற இறுக்கமான சட்டம் இருக்கிறது. இது மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட சட்டம். இதனால் தமிழர்கள் மட்டும் அல்ல அனைத்து இன மக்களும் இதனை மதித்து நடக்க வேண்டும்.