ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமீரா ரெட்டி.. மீண்டும் இதுபோல் ஃபிட்டாக வெறியோடு இருக்கிறாராம்

ஹிந்தியில் பிரபலமாக இருந்த சமீரா ரெட்டியை 2008ஆம் ஆண்டில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழுக்கு கூட்டி வந்தார் கௌதம் மேனன். முதல் படமே அதிரி புதிரி வெற்றியைப் பெற்றது.   அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படமே தல அஜித்துடன் அசல் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதனைத் தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார்.

அதன்பின் 2013ம் ஆண்டு கன்னட படத்தில் நடித்துவிட்டு பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ள நிலையில், 45 வயதான சமீரா ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் செம கிளாமரான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

ஏனென்றால் சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் சமீரா ரெட்டியிடம் ரசிகர் ஒருவர், ‘உங்களுக்கு மிகவும் பிடித்த கவர்ச்சி புகைப்படம் எது?’ என்று கேள்வி கேட்டபோது, அதற்கு, தன்னுடைய செம கிளாமரான பழைய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, அத்துடன் ‘மீண்டும் இவ்வாறு ஃபிட்டாக வேண்டும் என்ற ஆசை உள்ளது.

எனவே அதற்காக முழு உடற்பயிற்சியை மேற்கொள்ளுவேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் சிலர், ’45 வயதில் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் ஆசை தான்’ என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.