கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் உடமைகளைத் தேடிய பொலிஸார்; பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

கிளிநொச்சியின் இரு வேறு இடங்களில் விடுதலைப்புலிகளின் உடமைகளைத் தேடி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பாரதிபுரம் பாடசாலைக்கு பின்பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் குடியிருந்ததாக கருதப்படும் இரு வேறு இடங்களில்,

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த அகழ்வுப் பணிக்காக அனுமதி பெறப்பட்டு அகழ்வுப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜாவின் கண்காணிப்பின் கீழ் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.