‘அண்ணே, என்ன தெரியுதா’… ‘தீ விபத்தில் சிக்கிய மாணவி’… ‘இன்னைக்கு இந்த நிலையில இருக்கேன்’… நெகிழ்ந்துபோன கார்த்தி!

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் உதவியால் படித்த மாணவி, நடிகர் கார்த்தியைச் சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The girl who studied through Agaram foundation met Actor karthi

இதை அறிந்த நடிகர் சூர்யா, தீக்காயங்களிலிருந்து ஓரளவு மீண்ட பின், அகரம் அறக்கட்டளை மூலம் சென்னையில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியிலும் பொறியியல் படிக்க வைத்துள்ளார்.தற்போது அந்தப் பெண், தீக்காயங்களுக்குச் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே பணியாற்றுகிறார். அந்த மருத்துவமனையில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தி பங்கேற்றார். அவரை பார்த்ததும் ஓடிச் சென்று கார்த்தியை வரவேற்ற அந்த பெண், தான் அகரம் மூலம் படித்து இந்த நிலையில் இருப்பதைக் கூறியுள்ளார்.

தங்கள் அறக்கட்டளை மூலம் படித்து, இந்த நிலைக்கு உயர்ந்த அந்த பெண்ணை நெகிழ்ந்து போய் கார்த்தி பாராட்டினார்.