பிரிட்டனில் ஒரே நாளில் 7 லட்சத்தி 11,000 ஆயிரம் பேருக்கு தடுப்பு ஊசி போட்டு பெரும் சாதனை !

பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் மொத்தம் 7 இலட்சத்து 11 ஆயிரத்து 156 பேர் முதலாவது மட்டும் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. சும்மா அல்ல குத்து குத்து என்று குத்தித் தள்ளியுள்ளார்கள் ஊசிகளை. இதனை அடுத்து முதலாவது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 68 இலட்சத்து 53 ஆயிரத்து 407 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மொத்தம் 21 இலட்சத்து 32 ஆயிரத்து 551 பேர் தடுப்பூசியின் இரண்டாவது பாகத்தினை பெற்றுள்ளார்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது. சமீபத்தில் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அஸ்ரா செனிக்கா தடுப்பூசியை பெற்றுக் கொண்டார். இதனூடாக குறித்த மருந்து மிகவும் பாதுகாப்பானது என்று அவரே நிரூபித்தும் உள்ளார்.