கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாராவை கிண்டல் செய்து யுவராஜ் சிங் ஒரு ட்வீட் செய்துள்ளார்.

இதில் டாஸ் வென்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இந்தியா லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக யூசுப் பதான் 62 ரன்களும், யுவராஜ் சிங் 60 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இலங்கை லெஜண்ட்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் சாலை பாதுகாப்பு உலக தொடருக்கான கோப்பையை இந்தியா லெஜண்ட்ஸ் கைப்பற்றியது.
இந்த நிலையில் இருசக்கர வாகங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாராரும் நடித்திருந்தனர்.
இதனை சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவர்களது நடிப்பிற்கு ‘ஆஸ்கருக்கு பரிந்துரை’ என யுவராஜ் சிங் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.