நீங்களும் அங்க தான் ஷிவானியுடன் இருந்தீங்களா? பாலாவை கேட்கும் நெட்டிசன்கள்

ஷிவானி மாலத்தீவு சென்று உள்ள நிலையில், பாலாஜியும் அவருடன் சென்று உள்ளாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் 4ல் மிக நெருக்கமான ஜோடியாக இருந்தவர்கள் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி ஆகியோர் மட்டும் தான். இந்த சீசனில் லவ் ட்ராக் இல்லாத குறையை தீர்த்து வைத்தது இவர்கள் தான் என்று கூட சொல்லலாம்.

ஷிவானி தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு நீச்சல் உடையில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையத்தை சூடேற்றி இருக்கிறார் அவர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் வைரலாகி வருகின்றன. பிக் பாஸ் முடிந்து வெளியில் வந்த பிறகு கவர்ச்சி காட்டுவதை குறைத்துக்கொண்ட ஷிவானி மீண்டும் பேக் டு பார்ம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில் பாலாஜி முருகதாஸ் இன்ஸ்டாகிராமில் தான் நீச்சல் குளத்தில் இப்போது போன்ற போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள், ‘நீங்களும் ஷிவானி உடன் மாலத்தீவில் இருக்கிறீர்களா?’ என கமெண்ட்டில் கேட்டு வருகின்றனர்.