ராஜ மெளலியின் RRR படத்தை கைப்பற்றியது லைக்கா- தமிழ் நாட்டின் உரிமை லைக்காவுக்கே !

இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலியின் அடுத்த திரைப்படமான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கும் இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுதந்திரப்போராட்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் அக்டோபர் 13ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.