Flipkart Big Saving Days Sale இல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கேஜெட்டுகளுக்கு 50 முதல் 80 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

பிளிப்கார்ட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, Flipkart Big Saving Days அனைத்து தயாரிப்புகளிலும் சிறந்த சலுகைகளைக் வழங்கவுள்ளது. விற்பனையில், நீங்கள் EMI மற்றும் மற்ற பரிவர்த்தனைகள் மூலமாகவும் பொருட்களை வாங்க முடியும். இந்த விற்பனையானது மார்ச் 24 முதல் 26 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே Flipkart Big Saving Days Saleயில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மற்ற கார்டு வைத்திருப்பவர்களுக்கும் EMI விருப்பம் வழங்கப்படுகிறது. டிவி-ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, ஸ்மார்ட் டிவி செட்களில் 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கலாம்.
நீங்கள் கோடையில் ஏசி வாங்க விரும்பினால், Flipkart Big Saving Days Sale 55 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் முக்கியமாக ஐபோனுக்கு அதிகமான தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 11(64) விலை ரூ .54,900 என்ற நிலையில் Flipkart Big Saving Days Sale இல் ரூ .46,999 என விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விற்பனை நேரத்தில் பல புதிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கேஜெட்டுகளுக்கு கூடுதலாக, ஃபேஷன் மீது 50 முதல் 80 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் Flipkart பிராண்ட் தயாரிப்புகள் 80 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.