பொலிசை அனுப்பி கொரோனா மருந்துகளை கைப்பற்றும் இத்தாலி: பிரித்தானியா கடும் எச்சரிக்கை

இத்தாலியில் 29 மில்லியன் கொரோனா தடுப்பு ஊசிகளை பொலிசார் சுற்றி வளைத்து கைப்பற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள ஆஸ்ரா செனிக்கா நிறுவனத்தை முற்றுகையிட்ட பொலிசார். அங்கே ஏற்றுமதிக்கு தயாராக இருந்த 29 மில்லியன் தடுப்பூசிகளை கைப்பற்றி அதனை தடுத்து வைத்துள்ளார்கள். இன் நிலையில் பிரித்தானியாவுக்கு வரவுள்ள தடுப்பு மருந்துகளை தடுத்தால் பெரும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளாட்.

இருப்பினும் பொலிசார் தடுத்து வைத்துள்ள மருந்துகள், பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்ய இருந்த மருந்து இல்லை என்று ஆஸ்ரா செனிக்கா தெரிவித்துள்ளது. தற்போது தடுப்பு மருந்துகளுக்காக அரசு பொலிசாரை ஏவி விட்டு அதனை கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை, பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.