ஈழத்திலிருந்து பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப்போவது யாழ் யுவதியா? வன்னி இளைஞனா?, வெளிவந்துள்ள தகவல்!

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியென்றால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.

இந்நிகழ்ச்சி பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது, இந்த நான்கு சீசன்களையும் நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அவர்கள் திறன்பட செய்து முடித்துள்ளார்.

இந்நிலையில் வருகின்ற 5-வது சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, அதனை தொடர்ந்து 5-வது சீசனை தொடங்கும் திட்டத்தில் விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.

அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது, அந்த வகையில் கடந்த சீசன் 3-ல் ஈழத்து பெண்ணான லொஸ்லியா அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி உலகத்தமிழரை விஜய் தொலைக்காட்சி பக்கம் திருப்பினர்.

அதனை தொடர்ந்து கடந்த 4-காம் சீசனில் யாழ்ப்பாணத்து மொடல், மற்றும் குறும்படங்களில் நடித்த யுவதி ஒருவரை களமிறக்க இருந்த நிலையில், கொரோனா காரணமாக அந்த முயற்சியை கைவிட்டனர்.

தொடர்ந்து வரவிருக்கும் 5-வது சீசனில் கடந்த சீசனில் களமிறக்க முடியாமலிருந்த இலங்கை பெண்ணை களமிறக்க ஜோசித்து வருகின்றனர், அத்துடன் வன்னியை சேர்ந்த இளம் எழுத்தாளர் ஒருவரும் பிக்பாஸ் குழுவின் பரிந்துரையில் இருக்கின்றார்.

எது எப்படியாக இருந்தாலும், கொரோனா சூழ்நிலை மோசமடையாமலிருந்தால் வரும் சீசனில் ஒரு இலங்கையர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பார், அது யாழ் யுவதியா? வன்னி இளைஞனா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் தகவல் தெரிந்தவர்கள்.