கஜேந்திர குமார், சாணக்கியன் , சுமந்திரன் மூவரையும் கைது செய்ய கோட்டா அதிரடி திட்டமா ?

புலம்பெயர் அமைப்புகளை தடை செய்தது மட்டுமல்லாமல், அந்த அமைப்போடு பேசுபவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்ற ஒற்றை வார்த்தையை கோட்டா தனது வர்த்தமானியில் இணைத்துள்ளார். பொதுவாக பார்த்தால் சுமந்திரன் BTF மற்றும் GTFன் தொடர்பில் உள்ளார், சாணக்கியன் கன்டாவில் உள்ள அமைப்போடு தொடர்பில் உள்ளார். மேலும் கஜேந்திர குமார் தமிழ் தேசிய அமைப்புகளோடு தொடர்பில் உள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கையாக, இதனை காரணம் காட்டி எவரையும் கைது செய்ய முடியும்.  இது நாள் வரை அரசுடன் ஒத்து ஊதிய சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோ P2P ல் கலந்து கொண்டதால், அவர்கள் மீது கோட்டா கடுப்பில் உள்ளார். இதனை சரி செய்ய அவர்களால் இன்றுவரை முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

அப்படி என்றால் மொத்தமாக தமிழர்களுக்காக யார் பேசினாலும், அவர்களின் வாயை அடைக்க கோட்டபாய ராஜபக்ஷ முடிவெடுத்துள்ளார். மியான்மாருக்கும் இலங்கைக்கும் என்ன என்ன வித்தியாசம் ? மியான் மாரில் ராணும் ஆட்சி செய்கிறது. அது போல இலங்கையில் முன் நாள் மற்றும் இன் நாள் ராணுவ தளபதிகள் ஆட்சியில் இருக்கிறார்கள். இதனை நாம் உடனடியாக சகல வெளிநாடுகளுக்கும் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனை தமிழர்கள் நிச்சயம் செய்ய வேண்டும்.

இலங்கை மீது பொருளாதார தடை ஒன்றை கொண்டுவரவேண்டும். அப்படி என்றால் தான் சிங்கள மக்களே கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக திரும்புவார்கள்.