நானும் ரவுடி தான் என்று சொல்லி மாட்டிக் கொண்ட ரியூப் தமிழ் மொட்டை பாஸ் ரவி !

டென்மார்க்கில் உள்ள ரவி என்பவரால் இயக்கப்படும் ரியூப் தமிழ் என்ற இணையம், ஆரம்ப காலத்தில் இந்தியாவில் வெளியாகும் நாடகங்களை திருடி போட்டு தமிழ் மக்களை தம் பால் இழுத்துக் கொண்டது. நாடகம் பார்க்க வந்த தமிழர்கள் அதிகரிக்கவே அவர்கள் திருட்டுதனம் தமிழ் தேசியம் பால் திரும்ப. தமிழ் தேசியத்தையும் அடகு வைக்க புறப்பட்டவர் தான் இந்த ரவி. அடிப்படையில் இவர் விடுதலைப் புலிகள் எதிர்ப்பு வாதி. தமிழர் விடுதலை என்பதே தேவை இல்லை என்பது இவர் கருத்து. ஆனால் நானும் ரவுடி தான் என்ற கணக்காக, தமிழர்களின் ஆதரவைப் பெற இவர் அடிக்கடி போராட்டம் பற்றி பேசி வந்தார். அது போக இலங்கையில் உள்ள இவரது சகாக்கள், புலிகளுக்கு ஆதரவு போல தம்மை காட்டி வந்தார்கள். ஆனால் பார்த்தீர்கள் என்றால். ரியூப் தமிழ் பணியாளர்கள் பலர் ரவுடி அருணோடு(நல்லூரை கழிவறை ஆக்குவேன் என்று சொன்ன) செல்ஃபி எடுப்பது தொடக்கம் தொடர்பில் இருந்து வந்துள்ளார்கள். (ஆதாரம் இணைப்பு) 

இன் நிலையில் தான் இன்று(29) அதிரடிப்படையினர் ரியூப் தமிழ் அலுவலகத்தை முற்றுகை இட்டு, அனைவரையும் அப்பிச் சென்றுள்ளார்கள். இதில் முக்கியமான பெண் டிவேனியா. இவர் யாழில் செய்யாத அட்டகாசம் இல்லை. தமது Tற்P ரேட் எகிறவேண்டும், மற்றும் யூரியூப்பில் இருந்து லட்சக் கணக்கில் காசு வரவேண்டும் என்பதற்காகவே இவர்கள் புலிகள் ஆதரவு போல நடித்துள்ளார்கள். பல நாள் கள்வன் ஒரு நாள் அகப்படுவான் என்பார்கள். இவர்கள் பணத்துக்காக புலிகள் வேஷம் போட, இலங்கை அதிரடிப்படை இவர்களை அப்பியது தான் உண்மை. அதிலும் கள்ள நாடகங்களை ரியூப் தமிழில் போட்டு தமிழர்களை வரவளைத்து.

அவர்கள் ஊடகம் பிரபல்யமான பின்னர், ரவி என்கிற இந்த மொட்டை பாஸ் அதில் வந்து சொல்லும் செய்திகள் தான் சகிக்க முடியாதவை என்கிறார்கள் மக்கள். அடிப்படையில் எந்த ஒரு அரசியல் அறிவோ, இல்லை உலக நடப்போ தெரியாத இந்த ரவி என்கிற மொட்டை பாஸ், கையில் ஒரு பேனாவோடு வந்து ரியூப் தமிழில் போடும் ஆட்டம் தாங்க முடியாது. ஏதோ உலகமே தன் கையில் உள்ளது போல இவர் பேசுவதும், பிழையான தகவல்களை மக்களுக்கு சொல்வதுமே இவர் வழக்கம். தற்போது இலங்கை அரசின் பிடியில் சிக்கியுள்ளார்கள் இவர்கள். தமிழர்களே ஏதோ நீங்கள் நினைப்பது போல இவர்கள் ஒன்றும், தேசியவாதிகள் அல்ல. யூரியூபில் கூகுள் அட் சென்ஸ் மூலமாக பல மில்லியன் பணத்தை சம்பாதிக்கும் ஒரு கோஷ்டி தான். இவர்ள் குறிக்கோள் காசு. அது போக இந்த ரவி டென்மார்கில் பல தமிழர்களிடம் பணத்தை பெற்று, ஊரில் நல்லது செய்வதாக கூறி ஏமாற்றி உள்ளதாக அருண் என்கிற காவாலியே தகவல் சொல்கிறார் என்பது மிகவும் ஆச்சரியம் தான்.

ரியூப் தமிழ் என்பது தமிழர்களை சினிமா மோகத்தினுள் கொண்டு சென்று, அதனூடாக அரசியல் செய்து, மாதம் 30,000 ஆயிரம் யூரோக்களை சம்பாதிக்கும் ஒரு ஊடகமே தவிர அது ஒன்றும் தேசியம் சார்ந்தது அல்ல. நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு வீடியோவுக்கும் 1 யூரோக்களை அவர்கள் பணமாக பெற்றுக் கொள்வார்கள். அவ்வளவு தான். நானும் ரவுடி காலி….