பிரிட்டனில் 1 லட்சம் பேரில் 73 பேருக்கே கொரோனா தொற்றுகிறது: மாபெரும் வெறி என்கிறது பிரிட்டன்

ஒரு லட்சம் பேரை எடுத்துக் கொண்டால், அதில் 73 பேருக்கு தான் கொரோனா தொற்று ஏற்படுவதாகவும். நாடு தழுவிய ரீதியில் 4000 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் தற்போது 30 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில். கொரோனா தொற்று வெகுவாக குறைவடைந்து, பரவல் சுமார் 76% சத விகிதத்தால் குறைவடைந்துள்ளது எனவும்.

சாவு எண்ணிக்கை சுமார் 82% சத விகிதம் குறைவடைந்துள்ளது. இதனை மாபெரும் வெற்றி என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சொல்லப் போனால் 25 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கொரோனா தொற்று கடுமையாக உள்ளது. அதிலும் ஹங்கேரி, எஸ்டோனியா, போலந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா கட்டுக்கு அடங்காமல் சென்று வருகிறது. நேற்று தொலைக்காட்சியில் பேசிய பிரான்ஸ் நாட்டு அதிபர், பிரித்தானியாவின் உருமாறிய கென்ட் வைரசே தற்போது பிரான்சில் பரவி வருகிறது என்றும்.

பிரித்தானியாவே இதற்கு காரணம் என்றும் கூறி பிரிட்டனை சாடியுள்ளார். இதனை பிரித்தானியா கடுமையாக மறுத்துள்ளது. பிரான்ஸ் அதிபர் கூறுவதில் அர்த்தம் இல்லை என்று பிரித்தானிய சுகாதார துறை அமைச்சு தெரிவித்துள்ளார்.