வசூலில் வரலாறு காணாத சாதனை’… அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுதான் சாதனை வசூல்!

ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஜிஎஸ்டி வரி வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

மார்ச் 2021-ல் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.23 ட்ரில்லியன்கள் என்று சாதனை படைத்துள்ளது, ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுதான் சாதனை வசூல் ஆகும். கடந்த ஆண்டு மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூலை விட இது 27% அதிகரித்துள்ளது. இதனை நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் இறக்குமதியின் மூலம் வசூலான வரி 70% அதிகமாகும். உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகள் இறக்குமதி உட்படக் கடந்த ஆண்டு இதே மாத வசூலை விட 17% அதிகம்.

இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 2021-ல் வசூலான மொத்த ஜிஎஸ்டி அல்லது சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 1,23,902 கோடியாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி வசூல் , ரூ. 22, 973கோடி, மாநில ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.29,329 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.62, 842 கோடி, (இதில் இறக்குமதி மூலம் வசூலான ரூ. 31,097 கோடி ரூபாயும் அடங்கும்), மற்றும் செஸ் ரூ. 8,757 கோடியாகும். இதிலும் ரூ.935 கோடி இறக்கு மதி வரி மீதான செஸ் தொகை வசூலாகும்.

2019-20-ம் நிதியாண்டில் 12 மாதங்களில் 9 மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. ஏப்ரலில் ரூ.32,172 கோடி, மே மாதத்தில் ரூ.62,151 கோடி, ரூ90,917 கோடி ஜூனில், ரூ.87,422 கோடி ஜூலையில், ரூ.86,449 கோடி ஆகஸ்ட்டில் கடந்த ஆண்டு வசூலாகியுள்ளது. செப்டம்பரில் ரூ.94,480 கோடி, அக்டோபரில் ரூ.1,05,155 கோடி, நவம்பரில் ரூ. 1,04,963 கோடி, டிசம்பரில் ரூ.1,15,174 கோடி. 2021 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் 1,19,847 கோடி, பிப்ரவரி 1,13, 143 கோடி.

இதற்கிடையே கடந்த 6 மாதங்களாக 1 லட்சம் கோடியைச் சீராகக் கடந்துள்ள ஜிஎஸ்டி வரி வசூல் கோவிட் பெருந்தொற்றுக் காலகட்டத்திலும் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.