நம்ம தவானா இது..!’.. சஹால் மனைவியுடன் ‘செம’ டான்ஸ் ஆடிய ஷிகர்..!

இந்திய கிரிக்கெட் வீரர் சஹால் மனைவியுடன் தவான் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Shikhar Dhawan and Dhanashree Verma dance video goes viral

Shikhar Dhawan and Dhanashree Verma dance video goes viral

இந்நிலையில் பேட்டி ஒன்றில் தெரிவித்த தவான், தான் எப்போதும் பள்ளத்தில் இருப்பதாகவும், தன்னுடைய வாய்ப்பு கிடைத்தால் அதை எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு விளையாடுவது சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாகவும் தவான் கூறினார்.

Shikhar Dhawan and Dhanashree Verma dance video goes viral

மேலும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தன்னை சர்வதேச போட்டிகளுக்கு தயாராக வைத்துக் கொள்வதாகவும், அங்கு விளையாடுவது சிறப்பான பயிற்சியாக அமைவதாகவும் தவான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்காக ஷிகர் தவான் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தவான் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் சஹாலின் மனைவி தனஸ்ரீ வர்மாவுடன் பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவான் பதிவிட்டுள்ளார்.

Shikhar Dhawan and Dhanashree Verma dance video goes viral

சஹால்-தனஸ்ரீ வர்மாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.