4,000 படைகளை நகர்த்திய ரஷ்யா: பெரும் யுத்தம் வெடிக்கும் அபாயம் உள்ளது ?

உக்கிரைன் நாட்டின் பெரும் பகுதிகளை ரஷ்யா கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி வருகிறது. பலருக்கு நினைவிருக்கும் யூக்கிரேன் நாட்டின் ஒரு பகுதியான கிரீமியாவை ரஷ்யா ஆக்கிரமித்துக் கொண்டது. கிரீமிய மாநகர சபையில் ஒரு வாக்கெடுப்பு நடந்ததாகவும். அதில் அம் மாநகர மக்கள் ரஷ்யாவோடு இணைய வேண்டும் என்று வாக்களித்ததாகவும் கூறி ரஷ்ய படைகள் கிரீமியாவை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். தற்போது உக்கிரைன் நாட்டின் மற்றுமொரு பெரும் பகுதியான டொன் பாஸ் என்னும் இடத்தையும் ரஷ்யா கைப்பற்றி உள்ளது.

டொன் பாஸ் என்ற மாநிலத்தின் பெரும் பகுதியை, ரஷ்ய ஆதரவு பெற்ற டொன் பாஸ் ஆயுதக் குழு ஒன்று தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவர்கள் சுமார் 28,000 ஆயிரம் பேர் உள்ளார்கள். இன் நிலையில் குறித்த பகுதிக்கு நேட்டோ படைகளை அனுப்பி, உக்கிரைனுக்கு உதவ அமெரிக்கா முடிவெடுத்துள்ள நிலையில். நேட்டோ படைகள் வந்தாப் பெரும் போர் ஒன்று வெடிக்கும் என்று கூறியுள்ள ரஷ்யா. முன்னேற்பாட்டாக 4,000 துருப்புகளை மற்றும் நூற்றுக் கணக்கான ராங்கிகளை குறித்த பகுதிக்கு அனுப்பியுள்ளது.

இதனால் டொன் பாஸ் மாநிலத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. என்ன வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை காணப்படுகிறது.