கிளாமர் நடிகையாக இருந்த என்னை மாற்றியது வடிவேலு தான்.. உள்ளம் குளிர்ந்து பேசிய நடிகை

கவர்ச்சி நடிகைகள் பலருக்கும் சினிமாவில் நல்ல பெயர் கிடையாது. அவர்களை ஒரு காட்சிப் பொருளாகவே பயன்படுத்திக் கொள்வார்கள். மேலும் அவர்களை மிகவும் தரக்குறைவாகவும் நடத்துவார்கள்.இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சினிமாவில் உடம்பை காட்டினால் யாருக்கு வேண்டுமானாலும் காட்டி விடுவார்கள் என்ற முற்போக்கு சிந்தனை இங்கு பலருக்கும் உள்ளது. அதில் நிறைய நடிகைகள் மாட்டி சின்னாபின்னமாகி இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஆரம்பத்திலிருந்தே கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் சீரியல் நடிகை நீபா. சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியில் இறங்க தொடங்கினார். பின்னர் கவர்ச்சி காட்டி நடிக்க காரணம் தந்தையின் உடல் நிலை தான் எனவும் கூறியிருந்தார். விஜய் நடித்த காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் நீபா. வடிவேலு கதாபாத்திரம் எந்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோ அதே அளவு நீபாவுக்கும் வரவேற்பு கிடைத்தது.

அதற்கு முழுக்க முழுக்க காரணம் வடிவேலு தானாம். அந்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படி வடிவமைத்து தனக்கும் அதில் முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வைத்ததால் தான் தன்னுடைய இமேஜ் தமிழ் சினிமாவில் மாறியதாக குறிப்பிட்டுள்ளார் நீபா. முன்னர் எங்கு சென்றாலும் கவர்ச்சி நடிகை என்று ஓரங்கட்டி விடுவார்கள் என்றும், ஆனால் காவலன் படத்திற்கு பிறகு தன்னுடைய இமேஜ் அப்படியே மாறி நல்ல கதாபாத்திரங்கள் தனக்கு கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.