‘நான் சிம்பிளா ஒண்ணு சொல்றேன்…’ ஐபிஎல் நடக்குறப்போ ‘அத’ மட்டும் பண்ணிடாதீங்க ப்ளீஸ்…! – முன்னாள் வீரர் வேண்டுகோள்…!

இங்கிலாந்து அணி ஜூன் ரெண்டாம்தேதி நியூஸிலாந்துக்கு எதிராக இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. ஐபிஎல் தொடர் மே 30-ம் தேதி அன்று முடிவடைகிறது, ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்பு டெஸ்ட் தொடரில் பங்கேற்க்க முடியுமா என்பது பரவலாக கேள்வி எழுப்பப்படுகிறது.

Former England captain not hold any international matches

இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதா வேண்டாமா என்று குழப்பமான மனநிலையில் இருந்தனர். தங்களின் சொந்த நாட்டிற்காக விளையாடுவதா அல்லது ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதா என்று முடிவெடுக்க முடியாத குழப்ப நிலைப்பாட்டுடன் இருந்தனர்.

Former England captain not hold any international matches

இந்த வருட ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணியில் இருந்து மோர்கன், ஜாஸ் பட்லர், ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, சாம் கரன், டாம் கரன், சாம் பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான் ஆகிய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

Former England captain not hold any international matches

இதுபற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளில், ‘இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் அவர்களுக்கு வணக்கம், ஐபிஎல் தொடர் நடக்கும்போது, இங்கிலாந்து வீரர்களை தேசிய அணிக்காக விளையாட அழைக்காதீர்கள் என ஆஷ்லே கில்ஸ் ஏற்கெனவே கூறியுள்ளார். ஐபிஎல் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்பதை இங்கிலாந்து வாரியம் உணர்வது மிக முக்கியம்.

Former England captain not hold any international matches

ஐபிஎல் தொடர் தொடங்க இருப்பதால், எவ்விதமான சர்வதேச போட்டிக்கான அட்டவணையையும் தயாரிக்காதீர்கள், நடத்தாதீர்கள். எளிமையாக தான் சொல்கிறேன்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.