அண்ணாவையும் தம்பியையும் ஒன்றிணைக்கும் இறந்து போன அம்மா டயான… சமாதானம் ஆரம்பம் !

மக்களின் இளவரசி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட டயான இறந்த பின்னர். அவரது 2 பிள்ளைகளான வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் ஒன்றாகவே வளர்ந்து வந்தார்கள். இன் நிலையில் அவர்களது திருமணம் பந்தமே இவர்களை பிரித்து வைத்தது என்று தான் கூறவேண்டும். மேகான் மார்களை அரச குடும்ப அங்கத்தவர்கள் தரக் குறைவாக நடத்தினார்கள் என்று கூறி. அவர் தனது கணவரை அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றுவிட்டார். இன் நிலையில் அவர்கள் கொடுத்த நேர்காணல் ஒன்று பெரும் சர்சைகளை கிளறி விட்டது யாவரும் அறிந்ததே..

இதனால் வில்லியம் மற்றும் ஹரி இடையே பெரும் விரிசல் ஏற்பட்டது. இன் நிலையில் பல சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. தற்போது அவர்களது அம்மாவின்(டயானாவின்) உருவச் சிலை ஒன்றை செய்ய புகழ் பெற்ற சிற்ப்பி ஒருவரை சாரா டின்டால் நியமித்துள்ளார். சாரா டின்டால் வேறு யாரும் இல்லை, அரச குடும்ப அங்கத்தவரும் ஹரி மற்றும் வில்லியத்தின் நெருங்கிய தோழியும் ஆவார்.

அம்மாவின் சிலை எப்படி இருக்க வேண்டும் என்று இருவரும் இணைந்து தமது கருத்துகளை சொல்லியுள்ளதோடு. ஜூலை 1ம் திகதி அதன் திறப்பு விழாவுக்கு தானும் வந்து கலந்து கொள்வதாக ஹரி கூறியுள்ளார். குடும்பத்தில் என்ன தான் பிரச்சனைகள் வேறு பாடுகள் இருந்தாலும். அம்மா என்ற ஒரு ஒற்றைச் சொல் அனைவரையும் , ஒன்றாகிவிடும் என்பது உண்மை தான். இதனால் தற்போது அரச குடும்பத்தின் சமாதான தூதுவராக மாறியுள்ளார் சாரா என்று தான் கூறவேண்டும்.  அவரது சமரச முயற்ச்சி பலிக்கும் என்று பலர் எதிர்வு கூறி வருகிறார்கள்.