இது தான் பிரித்தானியாவின் திட்டம்- உங்கள் ஹாலிடே எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள வாசியுங்கள் !

அடுத்த மாதம் 17ம் திகதியோடு வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல பிரித்தானியா அனுமதி வழங்க உள்ளது. இதனை இவர்கள் சிக்னல் லைட் சிஸ்டமாக 3ஆக பிரித்து உள்ளார்கள். ஒன்று சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சென்று மீண்டும் பிரிட்டன் திரும்பினால், நீங்கள் நிச்சயம் 14 நாட்கள் ஹோட்டலில் தங்கி இருக்க வேண்டும். உங்கள் செலவில். மஞ்சல் பட்டியலில் உள்ள நாட்டிற்கு சென்று திரும்பினால், 14 நாட்கள் உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருக்க வேண்டும் வேலைக்கு செல்ல முடியாது. மேலும்…

பச்சை லிஸ்டில் உள்ள நாடுகளுக்கு சென்று பிரிட்டன் திரும்பும் போது, கோவிட் டெஸ்ட் மட்டும் எத்தால் போதும். நீங்கள் உடனே வழமைக்கு திரும்பலாம். இந்த நடை முறை இந்த ஆண்டு இறுதி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன் பின்னரே தளர்வுகள் பற்றி யோசிக்க முடியும் என்று பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இன்று தெரிவித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.