பிரித்தானியாவில் அடுத்த வாரம் வரை கடும் குளிர்- 2 நாட்களுக்கு ஸ்னோ அடிக்க வாய்ப்புகள் உள்ளது !

பிரித்தானியாவில் கடந்த பாங் ஹாலிடே என்று அதி கூடிய வெப்பம் பதிவாகி இருந்தது. இன் நிலையில் கோடை விடுமுறை ஆரம்பமாக உள்ள நேரத்தில் வெய்யிலும் கொடி கட்டிப் பறக்கிறது என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் திடீரென மீண்டும் கடும் குளிர் பிரித்தானியாவை தாக்கி வருகிறது. நிறையவே சூரிய வெளிச்சம் இருந்தாலும். கடும் குளிர் நிலவி வருகிறது. இன் நிலையில்…

இந்த வாரம் முதல் கொண்டு அடுத்த புதன் கிழமை வரை மீண்டும் கடும் குளிர் தாக்க உள்ளது. அதிலும் ஞாயிறு மற்றும் திங்கட் கிழமை இந்த 2 தினங்களும் லண்டனில் பல இடங்களில் பனிப் பொழிவு காணப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த புதன்கிழமை வரை குளிர் நீடிக்கும் என்றும். அதன் பின்னரே குளிர் குறைய ஆரம்பிக்கும் என்று வழிமண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.