இல்-து-பிரான்சில் 105 சாவுகள் – 150 சதவீதத்தினை நெருங்கும் தீவிரசிகிச்சைப்பிரிவு – தொடரும் ஆபத்து

இல்-து-பிரான்சின் வைத்தியசாலைகள் அதன் கொள்ளளவைத் தாண்டி பெரும் அழுத்தத்தினையும் ஆபத்தினையும் எட்டி உள்ளது.இல்-து-பிரான்சில்  கொரோனாத் தொற்று வீதமானது, 100.000 பேரிற்கு 661இனைத் தாண்டி உள்ளது.   பிரான்சில் வைத்தியசாலைகளில் மட்டும் 183 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (06.04.2021)  சாவடைந்திருக்கும் நிலையில்,   இல்-து-பிரான்சில் மட்டும் 105 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 17.169  ஆக உயர்ந்துள்ளது.

இல்-து-பிரான்சில் 7.850  பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தீவிரசிகிச்சைப் பிரிவில் 1.660 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் கொள்ளளவைத் தாண்டிய நிலையில்  146%  ஆக உச்சமடைந்துள்ளது

இல்து-பிரான்சின் மாவட்டங்களில்

Paris – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  1.615 பேர் –  3.727  பேர் சாவு  (+19)
La Seine-Saint-Denis – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  1.092 பேர் –  2.060 பேர் சாவு (+16)
Le Val-de-Marne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 986 பேர்  – 2.545பேர் சாவு (+20)
Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.202 பேர் – 2.324 பேர் சாவு (+13)
Les Yvelines- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  593பேர் –  1.554 பேர் சாவு (+9)
Le Val-d’Oise- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  789 பேர் -1.683 பேர் சாவு (+9)
L’Essonne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 882 பேர் – 1.579 பேர் சாவு (+12)
La Seine-et-Marne – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  691 பேர் – 1.697 பேர் சாவு (+7)