வாட்ஸ்-அப் குழுக்களுக்கு இளம்பெண்ணின் நிர்வாண வீடியோக்களை பகிர்ந்த அதிகாரி; ஆவலாக பார்த்த…

கலபுரகி டவுன் சேடம் ரோட்டில் கலபுரகி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழக அலுவலகத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் சரணப்பா மகுந்தி என்பவர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஒரே பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதால் சரணப்பாவுக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருந்தது. 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்ததாகவும் தெரிகிறது. மேலும் அடிக்கடி 2 பேரும் வீடியோ காலும் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த இளம்பெண், சரணப்பாவிடம் எனக்கு பல்கலைக்கழத்தில் நிரந்தரமாக பணி பெற்று தரும்படி கேட்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது நிரந்தர பணி வாங்கி தருவதாக
சரணப்பாவும் கூறி இருந்தார்.

நிர்வாண வீடியோக்கள் பகிர்வு

இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் நிரந்தர பணி வாங்கி தர வேண்டும் என்றால் உனது நிர்வாண வீடியோக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று இளம்பெண்ணிடம், சரணப்பா கேட்டு இருந்ததாக தெரிகிறது. இதற்கு ஒப்புக்கொண்ட இளம்பெண்ணும் தனது நிர்வாண வீடியோக்களை சரணப்பாவின் வாட்ஸ்-அப்புக்கு அனுப்பி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூறியபடி இளம்பெண்ணுக்கு, நிரந்தர பணி பெற்று தர சரணப்பா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதுபற்றி சரணப்பாவிடம், இளம்பெண் கேட்டு உள்ளார். ஆனால் அவர் சரியாக பதில் சொல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக சரணப்பாவுக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சரணப்பா, இளம்பெண்ணின் நிர்வாண வீடியோக்களை பல்வேறு வாட்ஸ்-அப் குழுக்களில் பகிர்ந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த இளம்பெண், சரணப்பா மீது பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் சரணப்பா மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.