59 வயது சொலிசிட்டர் ரத்தக் கட்டியால் இறப்பு: ஆஸ்ரா செனிக்கா செய்த வேலை- வெளிவரும் தகவல் !

ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 59 வயது நபர், ரத்தக் கட்டிகள் காரணமாக இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் நாளுக்கு நாள் வெளியாகும் செய்திகள் அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசி சிலரது உடலில் ரத்தத்தை உறைய வைக்கிறது. அவரை நாடி நரம்புகள் ஊடாக செல்லும் வேளை. எமது உடலில் மூளையில் தான் மிக மிக நுன்னிய(சிறிய) ரத்த நாளங்கள் உள்ளது. அந்த இடத்திற்கு ரத்தக் கட்டிகள் செல்லும் வேளை.

மேலும் செல்ல முடியாமல் அடைத்து விடுகிறது. இதனால் மூளையின் சில முக்கிய பகுதிகளுக்கு ரத்தம் செல்லாமல் நின்றுவிடும். எமது உடலின் இயக்கமே மூளை தான். அது பழுதடைந்தால் என்ன ஆகும் ? என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். சில வாரங்களில் இறப்பு நேரிடும். இவ்வாறு தான் இதுவரை 80 பேர் இறந்துள்ளார்கள். அரசாங்கத்திற்கு இந்த தகவல் முதலிலேயே தெரியும். இருப்பினும் தடுப்பூசிகளை தொடர்ந்து போட அவர்கள் எவ்வாறு சம்மதித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தற்போது நீல் ஆஸ்டெல் என்னு 59 வயது சொலிசிட்டர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வாரிங்டன் என்னும் இடத்தில் வசித்து வந்தார் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. ஆனால் அவர் குடும்ப அங்கத்தவர்கள், ஆஸ்ரா செனிக்காவை போட்டுக் கொள்ளலாம் என்று மக்களுக்கு அறிவுரை கூறி உள்ளார்கள். 20 மில்லியன் மக்களில் 80 பேர் மட்டுமே இறந்துள்ளார்கள் என்று கூறும் அரசு. எத்தனை பேர் ரத்தக் கட்டி காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதனை குறிப்பிட வில்லை. ஏன் எனில் அதனை முதலிலேயே கண்டறிந்தால், ரத்தக் கட்டிகளை கரைக்க உடனடி சிகிச்சை கொடுக்க முடியும். சொல்லப் போனால் காப்பாற்றவும் முடியும்.