விடுதலைப்புலிகளை ஒத்த காவல்துறை; சர்ச்சைக்குள்ளான யாழ்.மாநகர காவல்ப் படை; விசாரணையில் நடந்தது என்ன?

கொழும்பு மாநகர சபையை பின்பற்றியே, யாழ் மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

சீருடை வழங்கிய விடயத்தில் வேறு எந்த உள்நோக்கமோ, திட்டமோ தங்களுக்கு இருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர ஆணையாளர் மற்றும், கண்காணிப்பு காவலர்களுக்கு காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாக இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.