வீடு கட்ட நடத்தப்பட்ட பூமி பூஜையின்போது தங்கப்புதையல் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக செப்பு குடம் ஒன்று கிடைத்துள்ளது. இதனை எடுத்துப் பார்த்தபோது அதில் ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்துள்ளன. இதைப் பார்த்ததும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கிராமவாசி ஒருவர், புதையலுக்கு சூடம், ஊதுபத்தி காட்டி, தேங்காய் உடைத்துள்ளார். பின்னர் அந்த செப்பு குடத்தை கையில் எடுத்தது, சாமி வந்ததுபோல் சிரித்து அருகில் இருந்தவர்களை பீதியடைய வைத்துள்ளார்.
இதனை அடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் நரசிம்ஹா, போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் வந்த அதிகாரிகள் தங்கப்புதையலைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். செப்பு குடத்தில் இருந்த தங்க ஆபரணங்கள் சுமார் 6 கிலோவுக்கும் மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காகதீய ராஜாக்கள் ஆட்சி காலத்தின்போது பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வீடு கட்ட நடந்த பூமி பூஜையின்போது தங்கப்புதையல் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.