பிரித்தானியாவில் மதுபோதையில் தவறான வார்த்தையில் பேசிய தமிழர்; கறுப்பினப்பெண் செய்த செயல்

இங்கிலாந்தில் வீதியில் மதுபோதை காரணமாக விழுந்து கிடந்த தமிழர் ஒருவர் நடந்துகொண்ட விதத்தை பற்றிய சம்பவத்தை, அங்கு வாழும் சமூக ஆர்வலர் ஒருவர் முகநூலில் பதிவு செய்துள்ளமை பரவலாக பேசப்பட்டு வருகிறது.

குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளமை பின்வருமாறு,

பதிவு தொடக்கம் , நேற்று, நான் வேலைசெய்யும் கடைக்கு முன்பாக உள்ள பேரூந்து தரப்பில் இவர் விழுந்து கிடந்தார். இலங்கைத் தமிழர். காலை 10.30 மணி இருக்கும். நிறை தண்ணி. இவர் தகாத வார்த்தைகளால் பேரூந்துக்காக காத்திருந்த கருப்பின பெண் ஒருவரை ஏசிக்கொண்டிருந்தார். அந்தப் பெண் இவரை சட்டை செய்யவில்லை. தமிழ் கெட்ட வார்த்தை புரியாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அவரிடம் சென்று, எழுந்து வீட்டுக்கு போங்கோ என்றேன். “போடா டாஸ் ” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு, திருப்புகழில் வருவது போல, கடகடவென என அங்கு வரும் பெண்களை பேசிக்கொண்டிருந்தார். அங்கு நின்ற வெள்ளை இனத்தவர் ஒருவர், அவசர ஊர்தியை தொலைபேசியில் அழைத்தார். அவசர ஊர்தியும் அவசரம் இல்லாமல் வந்தது. அவர்கள் இருவரோடும் தமிழிலேயே கதைத்தார். நான் உயிர் போனாலும் அம்புலன்ஸ் ஏறமாட்டேன் . என்று மட்டும் திரும்பத் திரும்பச் அவர் சொன்னார்.

” அவர் வண்டியில் ஏற முடியாதாம்” என்று அவர்களுக்கு நான் கூறிவிட்டு கடைக்குள் போய்விட்டேன், சிறிது நேரம் கழித்து பெண் தாதி உள்ளே வந்து நீ அவரின் மொழி பேசுவாயல்லவா. அவர் இரண்டு முகவரிகளை சொல்கிறார். அவரின் முகவரி எது என்று கேட்டுச் சொன்னால் அவரை வீட்டில் இறக்கிவிடலாம் என்றார்.

நான் வண்டியிலும் ஏறி, ” அண்ணை உங்கட வீடு எங்கு உள்ளது” என்று கேட்டன். போடா. என்று பதில் சொன்னார். தாதி கேட்டார் என்ன சொன்னவர் எனக் கேட்டார். நான் என்னத்த சொல்ல. அவர் சொன்னதைச் சொன்னேன். அவள் சிரித்துக்கொண்டாள். அதன் பின் அவர்களிடம்.

நீ பேசும் மொழி தமிழா என்று கேட்டார். ஆம் என்று சொன்னதும். நன்றி. சென்றுவாருங்கள். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம். என்றார்கள். என்ன பிரச்சனையோ. என குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் ஒரு தமிழர் செய்யும் தகாத செயல் ஒரு இனத்தையே தவறானதாக மாற்று இனத்தவரால் புரிந்து கொள்ள இடமளிக்கும், எனவே நீங்கள் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளும்போதுதான், தமிழும் நன்மதிப்பை பெறும், தமிழர்களும் நன்மதிப்பை பெறுவார்கள்.

Contact Us