24 வருட மர்மங்கள் கலைந்த நாள்: 12 அடி முதலையை பிடித்து வயிற்றை வெட்டிய வேளை !

24 வருடங்களாக அந்த ஊரில் நடந்த பல மர்மங்கள் இன்றுதான் வெளியானது. அமெரிக்காவின் சவுத் கரோலைனா மாநிலத்தில் உள்ள அந்த ஊரில் கடந்த 24 வருடங்களாக பலர் தமது நாய் குட்டிகளை காணவில்லை என்று தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வந்தார்கள். பொலிசார் எங்கு தேடியும் அவை ஒரு போதும் அகப்பட்டது இல்லை. நேற்று முன் தினம் தான் , திடீரென இந்த 12 அடி நீளமும் 445 பவுண்டுகள்(200KG) எடை கொண்ட இந்த ராட்சச முதலையை சிலர் ஏரியில் பார்த்துள்ளார்கள்.

இது சிறுவன் ஒருவனை தாக்க வந்தவேளை, அதனை முதலை பிடிக்கும் தனியார் படையின மடக்கிப் பிடித்து விட்டார்கள். இறந்த முதலையின் வயிற்றை கிழித்தவேளை உள்ளே பல நாய் குட்டிகளின் பெயர் எழுதும் பட்டிகள், குடலில் சிக்கி இருந்துள்ளது. பொதுவாக பெயர் எழுதும் பட்டி தகரத்தில் இருக்கும். இந்த தகர துண்டுகளை வைத்தே தொலைந்த நாய்கள் எப்படி தவறியது என்று அறிந்து கொள்ள முடிந்துள்ளது.

Contact Us