ஈரான் அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல்- ஒரு பகுதி வெடித்து சிதறியது என்கிறது அமெரிக்க உளவுத்துறை !

ஈரான் நாட்டில் மலைகளுக்கு நடுவே மிகவும் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அமைந்துள்ள யுரேனியம் செறிவாக்கும் தளத்தை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் விமானப்படை அந்த இடத்தை நெருங்க முடியாது, உளவுப் படை அங்கே செல்ல முடியாது ஆனால் எப்படி இந்த தாக்குதல் நடந்து என்று கேட்டால் அனைவரும் ஆடிப் போய் விடுவோம். ஈரானின் இந்த கடும் பாதுகாப்பு மிக்க ஏரியாவுக்கு எவரும் செல்ல முடியாது. ஆனால்…

குறித்த அணு உலைத் தளத்தில் உள்ள கம்பியூட்டரை, வேறு ஒரு இடத்தில் இருந்து ஹக் செய்த இஸ்ரேல் வெப்பத்தை கட்டுப்படுத்தும் கருவிகளை செயல் இழக்கச் செய்துள்ளது. இதனால் அளவுக்கு அதிகமான வெப்பம் அங்கே தோன்றி. ஒரு பகுதி வெடித்து சிதறியதாக அமெரிக்க உளவுத்துறை சற்று முன்னர் அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. NewYork Times : US intelligence sources told the New York Times Saturday’s attack led to an explosion that destroyed the independently protected power supply to advanced centrifuges that create enriched uranium, and that it could take at least nine months to restore production. ran’s foreign ministry has blamed Israel for sabotaging Iran’s main uranium enrichment facility, and although Israel has not formally confirmed responsibility its officials have done little to dispel the notion.

இதனை அடுத்து யுரேனியத்தை செறிவூட்டும் ஒரு பகுதி முற்றாக செயல் இழந்துள்ள நிலையில். மீண்டும் அதனை கட்டி முடிக்க 9 மாதங்களாவது பிடிக்கும் என்று அமெரிக்க சி.ஐ.ஏ தெரிவித்துள்ளது. இதனை சற்று முன்னர் தான் ஈரான் நாடு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் தாக்குதல் நடத்திய நாடு மீது தாம் பதில் தாக்குதலை நிச்சயமாக நடத்துவோம் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Contact Us