யாருமே ராணுவ சீர் உடை அணிய முடியாது: மகாராணி கடும் கட்டளை பிறப்பித்தார்- சாதாரண உடைதான் !

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் தனது 99வது வயதில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். அவரின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.இந்நிலையில், ராணியின் குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்கின்போது, குடும்பத்தில் உள்ள ஒருவர் இராணுவ உடை அணிந்து செல்வர். இது பராம்பரிய நிகழ்வாக இருந்து வருகிறது. இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கின்போது ஹாரி அல்லது 61 வயதான ஆண்ட்ரூ ஆகியோரில் ஒருவர்தான் இராணுவ ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், ஹாரி ஆப்கானிஸ்தான் போரின்போது பிரித்தானிய படையுடன் இணைந்து செயற்பட்டிருந்தார். அதேபோல் ஆண்ட்ரூ 1982ம் ஆண்டு போக்லாந்து தீவு பிரச்சினையின்போது பணிபுரிந்தார். Source : The Queen announces complete ban for Prince Philip’s funeral after Andrew’s demand.  Her Majesty will stop royals wearing military uniform at Prince Philip’s funeral at Windsor Castle on Saturday.

ஆனால் ராணிக்கு வந்த சோதனையைப் பாருங்கள். இவர்கள் இருவருமே பெரும் சர்சையில் சிக்கிய நபர்கள். ஆண்ரூ அமெரிக்காவில் உள்ள பெரும் செல்வந்தர் ஒருவரின் தனித் தீவில் பெண்களுடன் அடித்த கும்மாளம் புகைப்படம் புகைப்படமாக வெளியே வந்து பெரும் சர்சையைக் கிளப்பியது. அன்று முதல் இன்றுவரை எந்த பொது நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளக் கூடாது என்று மகாராணியார் கட்டளையிட்டார். தற்போது ஹரி தனது மனைவி மெகானுடன் சேர்ந்து அரச குடும்பத்தையே இன வெறி குடும்பம் என்று TV நிகழ்சியில் கூறினார். இதனால் ஹரிக்கு ராணுவ உடையைக் கொடுக்க கூடாது என்றும். தானே அணிய வேண்டும் என்றும் அண்ரூ அடம் பிடித்தார்.

இதனால் யாருக்கு கொடுப்பது என்ற பெரும் சர்சை வின்சர் கோட்டையில் வெடித்தது. ஆனால் மகாராணியாரோ அதிரடி முடிவை எடுத்தார். எவரும் ராணுவ உடை அணியத் தேவை இல்லை. அனைவரும் சாதாரண உடையில் வந்தால் போதும் என்று கூறி பெரும் பிரச்சனைக்கு ஒரு செக்கனில் செக் வைத்தார் மகாராணி. இருப்பினும் பல நூறு வருடங்களாக இருந்து வரும் வழக்கத்தை மாற்றவேண்டிய கட்டாய சூழலில் அவர் இருப்பது அவருக்கு பெரும் மன வருத்தத்தை கொடுப்பதாக வட்டாரங்கள் கூறியுள்ளார்கள். என்ன செய்வது குடும்பத்தில் உள்ள சில கறுப்பாடுகள் குழப்படி.

Contact Us