விவேக் நிலமை சற்று கவலைக்கிடம்: நல்ல நடிகர் தான் கடைசியில் தான் BJP பக்கம் விழுந்து பெயரைக் கெடுத்தார் !

நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உடனடியாக கைகளில் துளை போட்டு நாடி வழியாக கம்பி செலுத்தப்பட்டு, இதயத்தில் உள்ள அடைப்புகள் சிலவற்றை வைத்தியர்கள் நீக்கியுள்ளார்கள் என்றாலும். அவருக்கு தொடர்ந்தும் மூச்சு திணறல் இருந்து வருகிறது. சுய நினைவை இழக்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில். அவர் இன்னும் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என்பதனையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக். தனது நகைச்சுவை நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். ரசிகர்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகம் விதைப்பவர். சினிமாவில் நடிப்பது தவிர மரம் நடுவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார் விவேக். ஆனால் திடீரென அவர் BJP பக்கமாக சாய்ந்து விட்டார். தந்து உரையின் முடிவில் ஜெய்ஹிந்த் சொல்வதை அவர் வழமையாக்கிக் கொண்டார். தமிழக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஒ.பி.எஸ் கூட அவர் நலமுடன் மீண்டு வரவேண்டும் என்று அறிக்கை விடுகிறார்கள் என்றால். விவேக் எந்த அளவு BJP பக்த்தனாக மாறி இருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது.

Contact Us