மாமியாரோட ‘டிரெஸ்ல’ கைதவறி ‘கிரேவிய’ கொட்டிட்டேன்…! ‘அவங்க வாஷ்ரூம் போன உடனே, மருமகள் என்ன கூப்பிடாங்க, அப்போ…’ – வெயிட்டர் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு…!

வெளிநாடுகளில் நடைபெறும் திருமணங்களில் ஏதாவது ஒரு காமெடி கண்டிப்பாக நடக்கும், அதன் வீடியோக்களும் இணையங்களில் வைரலாகி அனைவரையும் சிரிக்கவைக்கும் வகையில் இருக்கும்.

daughter in law who happily gave Rs.5500 tips spilled gravy

டிக்டாக் யூசரான chloe beeee, தான் ஒரு திருமணத்தில் வெய்ட்டாராக பணிபுரிந்தபோது நடந்த கதையை தற்போது வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

பொதுவாக வெளிநாடுகளில் நடைபெறும் கிருத்துவ திருமணங்களில் மணப்பெண் மட்டுமே வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருப்பர். ஆனால் chloe beeee சென்ற திருமணத்தில் மணமகனின் தாயும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிர்ந்திருந்தார்களாம்.

அவை மணப்பெண்ணின் மாமியார் உடையில் அனைத்து இடங்களிலும் சிதறியதாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக, அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இரு குடும்பங்களும் உள்ளூர் என்பதால் மணமகனின் தாய் உடை மாற்றுவதற்காக அருகில் இருக்கும் தனது வீட்டிற்குச் சென்று ஆடையையும் மாற்றி வந்துள்ளார். இம்முறை வெள்ளை ஆடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண நிகழ்ச்சியை நாசப்படுத்தியதாக நினைத்து சோலி வேதனையில் அழ ஆரம்பித்த போது தான், அந்த ஆனந்தமான விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால், மாமியார் தனது வெள்ளை ஆடை சேதமடைந்ததை அடுத்து மாற்றுவதற்காக வாஷ்ரூம் சென்ற நேரத்தில், சோலியை அணுகிய மணப்பெண் அவருக்கு நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல் சோலிக்கு £ 55 யூரோ டாலர்களை டிப்ஸாக வழங்கியுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ரூ.55,000.

அதோடு மணமகள், ‘மணமகளை தவிர்த்து நிகழ்ச்சிக்கு வரும் வேறுயாரும் வெள்ளை ஆடைகள் அணியக்கூடாது’ என சிறித்து கொண்டே சொன்னாராம்.  இப்போதுகூட, எங்காவது இருவரும் சந்தித்து கொள்ளும் போது ஒருவருக்கொருவர் ‘ஹாய்’ சொல்லி கொள்வோம் என்றும் டிக்டாக் வீடியோவில் சோலி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Contact Us